Thursday, September 9, 2010

கூகுளின் சகுனி வேலை

கூகுளின் சகுனி வேலை



நாமெல்லாம் கூகுளின் வரைபடங்களைப் (Google Maps) பார்த்திருப்போம். இதேபோல் மற்ற நாடுகளிலும் பார்வையாளர்கள் ஏராளம்.

ஆனால் இந்த கூகுள் தன் வரைபடங்களின் மூலம் ஒரு கருங்காலித்தனத்தைச் செய்திருக்கிறது. நம் நாட்டின் அங்கங்களாக

இருக்கும் அருணாச்சலப்பிரதேச மாநிலம், பலகாலமாக பிரச்சனைக்குரிய காஷ்மீர் மாநிலம் மேலும் பலபகுதிகளை ஒவ்வொரு

நாட்டின் கூகுள் பார்வையாளர்களுக்கும் வேறுவேறாகக் காட்டி சகுனி வேலை செய்துள்ளது.

வெக்கங்கெட்ட நமது அரசாங்கத்திற்கு இதைக்கண்டு, கண்டிக்க வக்கில்லை.







ஏனென்றால் படிக்காமல் பான்பாக்குப்போட்டு துப்பித் திரியும் அமைச்சர்கள்தான் நமது நாட்டில் ஏராளம்.

மீதமிருக்கும் ஒன்றிரண்டு படித்த அறிவுள்ள அமைச்சர்கள் தன் தொழிலை எப்படி நடத்தலாம் என்று திட்டமிட்டு

அதற்கான சட்ட முன்வரைவுகளைத்தான் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். கொஞ்சமாவது நாட்டிலும் புவியிலும்

என்ன நடக்கிறது என்று அறிய ஆவலோ அல்லது இந்தியன் என்ற உணர்வோ இருப்பதாகத் தோன்றவில்லை இவர்களிடம்.




இதெல்லாம் இந்தியர்களின் உள்ளங்களைப் புண்படுத்துவது மட்டுமல்ல இதன்மூலம் சீன, பாகிஸ்தான்

மற்றும் இந்தியாவிற்கு போரை வரவழைக்கும் செயலிலும் கூகுள் செய்துகொண்டிருக்கிறது. இது இன்னும்

சிறிது காலமிருந்தால் அருணாச்சல பிரதேச மாநிலம், காஷ்மீரின் கிழக்குப்பகுதி ஆகியவற்றில் சீனா தேர்தல் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.




பின்வரும் படங்களைப் பாருங்கள்.


படம் 1 - கூகுள் இந்தியா (இந்தியாவில் தெரியும் கூகுள்) - அருணாச்சலப்பிரதேசம் (சிவப்பு வட்டமிட்டுக்காட்டப்பட்டுள்ளது)

india-arunachal





















படம் 2 - கூகுள் சீனா (சீனாவில் தெரியும் கூகுள் தளத்தில்) - அருணாச்சலப் பிரதேசம் எங்கே...? (சீனாவுடன் இணைத்துக் காட்டப்பட்டுள்ளது)

china-arunachal



படம் 3 - கூகுள் அமெரிக்கா (ஐக்கிய அமெரிக்க நாடுகளில் தெரியும் கூகுள் தளம்) - அருணாச்சலப்பிரதேசம் இரண்டு நாடுகளுக்கும் சேராமல் சர்ச்சைக்குள்ளான பகுதியாகக் காட்டப்பட்டுள்ளது! (ஒருவேளை அது நாளை அமெரிக்காவுக்கும் சேர்ந்துவிடலாம். அப்போது மன்மோகன் சிங் அவர்கள் அவ்வளவு தூரம் பறந்து அமெரிக்கா போகவேண்டியதில்லை, தொடர்வண்டியிலேயே அருணாச்சல் பிரதேசத்துக்குள் புகுந்தால் அமெரிக்கா தானே...!)
us-arunachal


படம் 4 - கூகுள் இந்தியா - காஷ்மீரின் கிழக்குப்பகுதி (இது இந்தியாப் பூச்சூடும் கொண்டைப்பகுதியாகத் தெரிகிறது).


india-kashmir



படம் 5 - கூகுள் சீனா - இந்தியாவின் கிழக்குக் காஷ்மீர் எங்கே...? அது சீனாவின் தெளிவான எல்லைக்கோட்டுக்குள்ளே...


china-kashmir



படம் 6 - கூகுள் அமெரிக்கா - காஷ்மீர் முழுவதும் தெளிவான எல்லைக்கோடு வகுக்கப்படாததாகக் காட்டப்பட்டுள்ளது!



us-kashmir



விழித்துக்கொள்ளவேண்டிய வேளை வந்தே விழிக்காத இந்தியக் குடிமக்கள் இதற்கென்ன பதிலளிக்கப்போகிறார்கள்?

No comments:

Post a Comment